- +94 112369066
-
இலங்கையின் நாட்டின் ஒருங்கிணைப்பு பொது சுகாதார வளாகம், 555/5, எல்விட்டிகல மாவத்தை,
கொழும்பு 00500 - [email protected]
Menu
உலகளாவிய நிதியத்தின் நாட்டு ஒருங்கிணைப்புப் பொறிமுறையின் (CCM) கட்டமைப்பும், எண்ணக்கருவும் தேசிய சொத்துடைமை மற்றும் பங்களிப்புத் தீர்மானம் மேற்கொள்ளல் ஆகிய கொள்கைகளைப் பிரதிபலிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டவை. தேசிய மட்டத்தில் இந்த உன்னதமான அரச, தனியார் பங்குடமையானது,உலகளாவிய நிதியத்தின் வளங்களை அவற்றைப் பெற்றுக் கொள்ளும் நாடுகளில் பயன் படுத்துவதை நிர்வகிக்கும் ஒரு அமைப்பாகச் செயற்படுகின்றது.
நாட்டு ஒருங்கிணைப்புப் பொறிமுறை இலங்கை (CCMSL) 2002 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஸ்தாபிக்கப்பட்டது. எயிட்ஸ் நோய் எதிர்ப்புப் போராட்டம்,காச நோய் மற்றும் மலேரியா எதிர்ப்பு ஆகிய துறைகளில் யோசனைகளை விருத்தி செய்து எயிட்ஸ் காச நோய் மற்றும் மலேரியா என்பனவற்றுக்கு எதிரான போராட்டத்துக்கான உலகளாவிய நிதியத்துக்கு (GFATM) சமர்ப்பிப்பதும், அவற்றை ஒருங்கிணைப்பதும் மற்றும் இலங்கையில் GFATM நிதியத்தின் மூலமான திட்டங்களை மேற்பார்வை செய்தலும் இதன் குறிக்கோள்களாகும். CCSMC இன் முக்கிய நோக்கம் GFATM ஆளுநர் சபை, செயலகம் மற்றும் யோசனைகள் மீளாய்வு சபையுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதாகும். அரச தனியார் பங்குடமை ஊடாக GFATM க்கு சமர்ப்பித்து நிதிகளைப் பெறுவதற்கான பொருத்தமான யோசனைகளை விருத்தி செய்வதும் அவற்றை ஒருங்கிணைப்பதும் கூட CCMSL இன் பொறுப்பாகும். அத்தோடு இலங்கையில் எச்.ஐ.வி, காசநோய் மற்றும் மலேரியா என்பனவற்றால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைக்கும் வகையில் இத்தகைய வளங்கள் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டனவா என்பதை கண்காணிப்பதும் இதன் பொறுப்பாகும்.
CCMSL என்பது தேசிய மட்டத்திலான பல்வேறு பிரிவினரைக் கொண்ட ஒரு அமைப்பாகும். அரச பிரிவு, தனியார் பிரிவு, கல்வித்துறை, சிவில் சமூக அமைப்புக்கள், சமய விசுவாச அடிப்படையிலான அமைப்புக்கள், பல்தரப்பு / இருதரப்பு பங்காளிகள் நோயோடு வாழும் அல்லது நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் என பல தரப்பினர் இதில் அடங்குகின்றனர்.
தற்போது CCMSL 27 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. சுகாதார மற்றும் போஷாக்குத்துறை அமைச்சின் செயலாளரே இதன் தலைவராவார். உபதலைவர் பதவி சிவில் சமூகத்தைச் சார்ந்த ஒருவருக்கு உரியது. CCMSL மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை கூடுகின்றது. |